உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரும் 3, 4ல் வீடு தேடி ரேஷன் பொருள் சப்ளை

வரும் 3, 4ல் வீடு தேடி ரேஷன் பொருள் சப்ளை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'தாயுமானவர்' திட்டத்தின் மூலம், வரும் 3, 4 ஆகிய தேதிகளில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் 'தாயுமானவர்' திட்டம் செயல்பாட்டில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 20,000 பேர், இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர். இந்நிலையில், வரும் 3, 4ம் தேதிகளில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிக்கான ரேஷன் பொருட்கள், வீடு தேடி சென்று வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை