உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காலீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி துவக்கம்

காலீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணி துவக்கம்

சீட்டணஞ்சேரி:உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது சீட்டணஞ்சேரி கிராமம். இந்த கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சிவகாம சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில், 36 அடி உயரம் கொண்ட புதிய தேர் செய்யப்பட்டு, 82 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு தேரோட்டம் நடந்தது. இந்த கோவிலில் கடைசியாக, 2005ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த, அப்பகுதி வாசிகள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலீஸ்வரர் கோவிலில், விநாயகர், முருகர் உள்ளிட்ட சன்னிதிகளுக்கும், ராஜகோபுரம் ஆகியவற்றுக்கும் பாலாலய நிகழ்ச்சி நடத்தப்பட்டு, கோவில் புனரமைப்புக்கான பணி தற்போது துவக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி