சுற்றுச்சுவர் இல்லாத ரெட்டமங்கலம் அரசு பள்ளி
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், ரெட்டமங்கலத்தில், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.பள்ளியில், பாதியளவு மட்டுமே சுற்றுச்சுவர் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத வழியே, கால்நடைகள் வளாகத்திற்குள் வருகின்றன. இதனால், மாணவ - மாணவியருக்கு விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.மேலும், இரவு நேரத்தில் மது அருந்தும் சம்பவமும் நடந்து வருகின்றன. எனவே, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க, பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.