/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முறையாக தேர்தல் நடத்த செங்குந்தர் சங்கத்திற்கு பதிவுத் துறை உத்தரவு
முறையாக தேர்தல் நடத்த செங்குந்தர் சங்கத்திற்கு பதிவுத் துறை உத்தரவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரில் செங்குந்தர் மகாஜன சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் உள்ளனர். இச்சங்கத்திற்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற ஏற்பாடுகள் நடந்து வந்தன.இந்நிலையில், தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறவில்லை எனவும், அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவித்து தேர்தல் நடத்த வேண்டும் என, பல்வேறு புகார்களை கூறி, முன்னாள் நிர்வாகிகள் உட்பட பலரும், பதிவுத் துறைக்கு புகாராக தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிப்பு அனுப்பி, நிர்வாகக் குழு தேர்தல் நடத்த, மாவட்ட பதிவாளர் முரளி, சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.