மேலும் செய்திகள்
ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைப்பது எப்போது?
16-Apr-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், காவாம்பயிர் ஊராட்சியில் உச்சிகொல்லைமேடு கிராமம் உள்ளது. இங்குள்ள பழங்குடியினர் தெருவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி அப்பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மழை நேரங்களில் இந்த சாலை சகதியாக மாறி பொதுமக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த மண் சாலையை சிமென்ட் சாலையாக மாற்ற, அப்பகுதிவாசிகள் அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களுக்கு வேளாண்மை இடுபொருட்களை, இந்த சாலை வழியாக எடுத்து செல்லும்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பழங்குடியினர் தெருவில் உள்ள, மண் சாலையை மாற்றி சிமென்ட் சாலை அமைக்க, துறை அதிகாரிகளுக்கு கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16-Apr-2025