உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வழிபோக்கர் மண்டபம் சேதம் இடித்து அகற்ற கோரிக்கை

வழிபோக்கர் மண்டபம் சேதம் இடித்து அகற்ற கோரிக்கை

வாலாஜாபாத்;திம்மராஜம்பேட்டை சாலையோரம் பழு தடைந்து ஆபத்தான நிலையில் உள்ள வழிபோக்கர் மண்டபத்தை இடித்து அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில் திம்மராஜம்பேட்டை உள்ளது. திம்மராஜம்பேட்டை சாலையோரத்தில் பேருந்து நிறுத்தம் எதிரே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான வழிபோக்கர் மண்டபம் உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் இல்லாத காலகட்டத்தில் கட்டப்பட்ட இந்த மண்டபம் தற்போது மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டடம் முழுக்க கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்துள்ளது. மண்டபத்தின் தளம் மீது பல வகையான மரங்கள் வளர்ந்து கட்டடத்தில் வேரிட்டு ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மழைக் காலத்தில் கட்டடம் முழுக்க ஈரமாகி விடுவதால் அச்சமயம் இடிந்து விழக்கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, திம்மராஜம் பேட்டை பகுதி மக்கள் கூறியதாவது, கடந்த ஆண்டுகளில் வெகு துாரம் பயணிப்போர் இந்த மண்டபத்தில் தங்கி ஓய்வெடுத்து சென்றனர். அப்போது பயனுள்ளதாக இருந்தது. ஆனால், தற்போது கட்டடம் பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. வழி போக்கர் மண்டபத்தை சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளதால் எப் போதும் இந்த மண்டபத்தை சுற்றி மக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால், மழைக்காலத்தில் மண்டபம் இடியக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே, திம்மராஜம்பேட்டை சாலையில் ஆபத்தான நிலையிலான வழிபோக்கர் மண்டபத்தை இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை