மேலும் செய்திகள்
திறந்து மூன்றே மாதத்தில் பள்ளி கட்டடம் விரிசல்
01-Feb-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில் வல்லப்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள வேளாளர் தெருவில் இயங்கி வந்த அரசு தொடக்கப் பள்ளி கட்டடம், மிகவும் பழுதடைந்ததை தொடர்ந்து, அதே தெருவில் மாற்று கட்டடம் ஏற்படுத்தப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக புதிய கட்டடத்தில் பள்ளி இயங்கி வருகிறது.எனினும், பழுதடைந்த பள்ளி கட்டடம் அகற்றப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. பயன்பாடற்ற இக்கட்டடத்தின் அருகே, அப்பகுதிக்கான அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.இதனால், அக்கட்டடத்தை சுற்றியுள்ள காலி இடங்களில், அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் விளையாடி வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் இக்கட்டடத்தால், அங்கன்வாடி குழந்தைகளின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.மேலும், கட்டடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சமீபகாலமாக, பயன்பாடற்ற இக்கட்டடத்திற்குள் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடப்பதாக, அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் பழைய பள்ளி கட்டடத்தை இடித்து அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01-Feb-2025