உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / படூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு மருத்துவர் பணியமர்த்த கோரிக்கை

படூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு மருத்துவர் பணியமர்த்த கோரிக்கை

படூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.சிகிச்சைக்கு வருவோர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அல்லது காஞ்சிபுரம் ஆகிய அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவ்வாறு அனுப்பும் போது வழியிலேயே நோயாளிகள் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன.மேலும், இரவு நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளதாக பல தரப்பினரும் புலம்புகின்றனர்.படூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர் பணியமர்த்த சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி