உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரைகுறை கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

அரைகுறை கால்வாய் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

காஞ்சிபுரம், காரப்பேட்டையில் அரைகுறையாக விடப்பட்ட கால்வாய் பணியை விரைந்து முடிக்க பகுதியில் வசீப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, கோனேரிகுப்பம் ஊராட்சியில், காரப்பேட்டை கிராமம் உள்ளது. இங்குள்ள கிராமத்தில் வசிப்போருக்கு தேவையான சாலை, குடிநீர், மழைநீர், கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் மேம்படுத்தி கொடுத்துள்ளன. இதில், 15வது நிதிக்குழு மானியத்தில், சமீபத்தில் மழைநீர் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் குறுக்கே சிறிய அளவிலான தடுப்பு சுவர் மற்றும் கால்வாய் தடுப்பு முழுமையாக கட்டப்படவில்லை என, அப்பகுதியில் வசிப்போர் கூறி வருகின்றனர். இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கால்வாயில் நிலை தடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே, அரைகுறையாக விடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், சிறிய தடுப்பு ஏற்படுத்தவும் வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி