உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தண்டலம், செட்டிப்பேடில் சிக்னல் அமைக்க கோரிக்கை

தண்டலம், செட்டிப்பேடில் சிக்னல் அமைக்க கோரிக்கை

தண்டலம்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் தண்டலம் ஊராட்சி அமைந்துள்ளது. தண்டலம், செட்டிப்பேடு கிராமங்களில், 8,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தண்டலம் மற்றும் செட்டிப்பேடு பேருந்து நிறுத்தத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து வாயிலாக, அப்பகுதிவாசிகள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.தண்டலம் மற்றும் செட்டிப்பேடு ஆகிய இரண்டு பகுதிகளிலும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த சிக்னல் இல்லை. இதனால், சாலையின் குறுக்கே வாகன ஓட்டிகள் தான்தோன்றி தனமாக செல்வதால், அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த தானியங்கி சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தண்டலம் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ