உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துார்ந்துபோன கால்வாயை சீரமைக்க கோரிக்கை

துார்ந்துபோன கால்வாயை சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம்:கள்ளிப்பட்டு ஏரி பாசன கால்வாய் துார்ந்து போயுள்ளதால், துார்வாரி சீரமைக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த தண்டலம் ஊராட்சி, கள்ளிப்பட்டு கிராமத்தில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி, 450 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து, பாசனத்திற்கு செல்லும் 3 கி.மீ., துார போக்கு கால்வாய் கரையின் இருபுறமும் புற்கள் வளர்ந்து, கால்வாய் துார்ந்து இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ளது. இதனால், மழைக்காலத்தில் ஏரியில் தண்ணீர் நிரம்பினால், பாசனத்தின்போது, வயல்வெளியில் தண்ணீர் பாய்ந் தோடும் நிலை உள்ளது. எனவே, வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்கும்முன் பாசனக் கால்வாயை துார்வாரி, சீரமைக்க வேண்டும் என, கள்ளிப்பட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை