உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உடைந்த குடிநீர் தொட்டி புதிதாக அமைக்க கோரிக்கை

உடைந்த குடிநீர் தொட்டி புதிதாக அமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஒன்றியம்வையாவூர் ஊராட்சி, நல்லுார் கிராமத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவில் அருகே, அப்பகுதிவாசிகளின் கூடுதல் குடிநீர் தேவைக்காக சிறுமின் விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.இப்பகுதிவாசிகள் மற்றும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குடிநீர் தொட்டி நீரை பயன் படுத்தி வருகின்றனர்.கடந்தாண்டு குடிநீர் தொட்டி உடைந்தது. உடைந்த பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால், இப்பகுதியினர் கூடுதல் குடிநீர் தேவைக்கு தொட்டியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குடிநீர்தொட்டியும் பயன்பாடின்றி வீணாகிவருகிறது.எனவே, உடைந்த பழைய குடிநீர் தொட்டியைஅகற்றி விட்டு, புதிய தொட்டி அமைக்க, வையாவூர் ஊராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நல்லுார்வாசிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை