/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடை கான்கிரீட் மூடி சேதம் புதிதாக மாற்றி அமைக்க கோரிக்கை
பாதாள சாக்கடை கான்கிரீட் மூடி சேதம் புதிதாக மாற்றி அமைக்க கோரிக்கை
முத்தியால்பேட்டை: நவ. 11--: முத்தியால்பேட்டை சேனியர் தெருவில், சேதமடைந்துள்ள பாதாள சாக்கடையின் கான்கிரீட் மூடியை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சி, சேனியர் தெருவில், சாலையின் மையப்பகுதியில், பாதாள சாக்கடை அமைக்கப் பட்டுள்ளது. இச்சாலையில் கனரக வாகனம் சென்ற போது, அதன் மேல் பொருத்தப்பட்டிருந்த கான்கிரீட் மூடி சேதமடைந்தது. இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், அங்குள்ள பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து, விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடையின் கான்கிரீட் மூடியை புதிதாக அமைக்க, முத்தியால்பேட்டை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.