சாலை வளைவில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் இருந்து ராஜாஜி மார்க்கெட், ஹைதர்பட்டரை, பாக்ரா பேட்டை, ரெட்டிபேட்டை, ஆனந்தாபேட்டை, ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் விஜயகிராமணி தெரு வழியாக சென்று வருகின்றனர்.இத்தெரு நுழைவாயில் பகுதியில் உள்ள காந்தி சாலை மாநகராட்சி துவக்கப்பள்ளி எதிரில், சாலையோரம் மண் அரிப்பால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலை வளைவில் திரும்பும் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, இரவு நேரத்தில் சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகளும் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், விஜயகிராமணி தெருவில் சேதமடைந்த சாலையை பேட்ச் ஒர்க் பணியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினரிடையே கோரிக்கை எழுந்துள்ளது.