மேலும் செய்திகள்
சென்சுரி பள்ளி ஆண்டு விழா
15-Aug-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் புள்ளியியல் துறை சார்பில், ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆண்டறிக்கை தாமதமாக வெளியாகி வருவதால், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் உட்பட பல தரப்பினருக்கு தகவல்கள் திரட்ட முடியாமல் ஏமாற்றம் அளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட புள்ளியியல் துறை, ஒவ்வொரு ஆண்டும், அனைத்து துறைகளின் புள்ளி விபரங்களை ஆண்டறிக்கையாக தயாரித்து, கலெக்டருக்கு சமர்ப்பிக்கும். பொதுமக்கள் பார்வைக்கும், மாவட்ட அரசு இணையதளத்திலும் வெளியிடப்படும். அதில், ஒவ்வொரு துறை அரசு திட்டங்களில் பயனாளிகள், பணியிடங்கள், காலியிடங்கள், கடன், தொழிற்சாலைகள், போலீசார் பதிந்த குற்ற வழக்குகள் எண்ணிக்கை, அரசுக்கு கிடைத்த வருவாய், வேளாண்மை நிலங்கள், வாகனங்கள் பதிவு என பல்வேறு தகவல்கள் புள்ளி விபரத்துடன் இருக்கும். இந்த ஆண்டறிக்கை ஆண்டுதோறும் சரியான நேரத்தில் வெளியிடாமல், பல மாதங்கள் தாமதமாக வெளியிடுகிறது. கடந்த 2021- - 22ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையே, 2023 ஜனவரி மாதம் தான் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2022 - -23ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, கடந்த 2024ல் வெளியிடப்பட்டது. கடந்த 2023- - 24க்கான ஆண்டறிக்கை 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டடது. கடந்த 2024 - -25ம் ஆண்டுக்கான அறிக்கை, அரசு இணையதளமான, kancheepuram.nic.inல் இதுவரை வெளியிடவில்லை. பல்வேறு துறையிலிருந்து புள்ளி விபரங்கள் சேகரிப்பதிலும், பல துறை அதிகாரிகள் புள்ளி விபரங்களை தர தாமதம் செய்வதாக புள்ளியியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆண்டுதோறும் இதே காரணத்தை தெரிவிக்கும் அதிகாரிகள், விரைவாக விபரங்களை பெற்று ஆண்டறிக்கை வெளியிட்டதாக இல்லை. அனைத்து துறையின் விபரங்களும் இந்த அறிக்கையில் இருப்பதால், பொதுமக்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசு துறை அதிகாரிகள் என பலருக்கும் இந்த அறிக்கை பயன்படுகிறது. தாமதமாக ஆண்டறிக்கை வெளியாவதால் பல தரப்பினருக்கு ஏமாற்றம் அளிக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் வெளியிட வேண்டிய இந்த அறிக்கையை வெளியிடாமல், புள்ளியியல் துறை அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
15-Aug-2025