உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடியிருப்பில் புகும் கழிவுநீரால் புளியம்பாக்கம் மக்கள் அவதி

குடியிருப்பில் புகும் கழிவுநீரால் புளியம்பாக்கம் மக்கள் அவதி

வாலாஜாபாத்:புளியம்பாக்கம், தெருக் கால்வாயில் தேங்கும் கழிவுநீர், மழை நேரங்களில் குடியிருப்புகளில் புகுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம், புளியம்பாக்கம் கிராமத்தில், பெரிய காலனி படவேட்டம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாய் நாளடைவில் அப்பகுதி குடியிருப்புகளில் இருந்து விடப்படும் கழிவுநீர் கால்வாயாக மாறி விட்டது. இக்கால்வாய் மூலம் செல்லும் கழிவுநீர் அப்பகுதி நிலங்கள் வழியாக வெளியேற வழிவகை ஏற்படுத்தப்பட்டு கடந்த ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்தது. இதனிடையே, ஓராண்டாக கால்வாயின் குறிப்பிட்ட சில பகுதிகளை பட்டா நிலம் எனக்கூறி சிலர் துார்த்து வி ட்டதாக கூறப்படுகிறது. இதனால், அக்கால்வாயில் கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி உள்ளது. இந்நிலையில், மழை நேரங்களின் போது கழிவுநீரோடு மழைநீரும் சேர்ந்து கால்வாய் நிரம்பி வழிகிறது. அச்சமயம், குடியிருப்பு வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுவதால் அப்ப குதி மக்கள் பல்வேறு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குடியிருப்புகளை சுற்றிலும் கொசு உற்பத்தி அதிகரித்து, சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்படுகின்றன. துர்நாற்றமும் வீசுவதால் சுவாசக் கோளாறு போன்ற பிரச்னைகள் நிலவுகிறது. எனவே, புளியம்பாக்கம் பெரிய காலனி படவேட்டம் மண் கோவில் தெரு கால்வாயில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலான கழிவுநீரை வெளியேற்ற வேண்டும். இதற்காக புதிய கால்வாய் வசதி ஏற்படுத்த சம்பந்தப்ட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை