உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சமன் செய்யாமல் அமைத்த புதிய சாலையால் மழைநீர் தேக்கம்

சமன் செய்யாமல் அமைத்த புதிய சாலையால் மழைநீர் தேக்கம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, அசோக்நகர், இந்திரா அவென்யூ பிரதான சாலையில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அசோக் நகர், சண்முகா நகர் உள்ளிட்ட பல்வேறு நகரில் இருந்து, ரயில்வே சாலை, காமாட்சியம்மன் சன்னிதி தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.பத்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை, சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.இதனால், சேதமடைந்த சாலையை அகற்றிவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், இந்திரா அவென்யூ பிரதான சாலைக்கு, மூன்று மாதங்களுக்கு முன் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.இந்நிலையில், காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு, புதிதாக அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது.புதிதாக சாலைஅமைத்தும் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மழைநீர் தேங்காத வகையில் சிமென்ட் சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:இந்திரா அவென்யூ பிரதான சாலையில், புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்ட இடத்தில் ஏற்கனவே பள்ளம் இருந்துள்ளது. தற்போது அந்த இடத்தில் சாலை சமன் இல்லாததால், மழைநீர் தேங்கியுள்ளது. அப்பகுதியை ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை