அரசு பள்ளியில் மழைமானி சேதமாகும் அபாயம்
காஞ்சிபுரம்காஞ்சிபுரம் மழைமானி கட்டமைப்புக்கான கம்பி வேலி சேதம் அடைந்துள்ளதால், கருவி சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம், முட்டவாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், நீர் வள ஆதாரத்துறை சார்பில், மழை நீர் பதிவு செய்யும் மழை மானி கட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு கம்பி வேலி உண்டு. சில மாதங்களுக்கு முன் பெய்த மழையால், கம்பி வேலி துருப் பிடித்து சேதம் அடைந்துவிட்டது. இதை சீரமைக்காவிட்டால், மழைமானி கருவி, சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. 'கம்பி வேலியைச் சீரமைக்க வேண்டும்' என, பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.