மேலும் செய்திகள்
களக்காட்டூர் சாலை பேட்ச் ஒர்க் வேலை துவக்கம்
7 minutes ago
ஊராட்சி செயலர் காலி பணிக்கு நேர்காணல் ரத்து
10 minutes ago
வாலாஜாபாத்: அவளூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது வளர்ந்துள்ள செடிகளின் வேர்கள் தளத்தை துளையிட்டு சேதம் ஏற்படுத்துவதால், வலுவிழக்கும் நிலையில் உள்ளது. வாலாஜாபாத் அடுத்த, அவளூரில் ஐந்து மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் அமைத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில், அவளூர் சிவன் கோவில் அருகே உள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி, 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வரும் நிலையில், குடிநீர் தொட்டியின் மூடுதளத்தின் மீது தற்போது அத்தி மரக்கன்று மற்றும் செடிகள் வளர்ந்து காணப் படுகின்றன. மரக்கன்றின் வேர்கள் நீர்த்தேக்க தொட்டியின் மூடுதளம் உள்ளிட்ட பல பகுதிகளை துளையிட்டு சேதமாவதோடு, கான்கிரீட் பெயர்ந்து குடிநீரில் கொட்டி அசுத்தமாவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர். எனவே, அவளூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது வளர்ந்துள்ள மரக்கன்று மற்றும் செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
7 minutes ago
10 minutes ago