உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 2 ஆண்டுகளாகியும் சீரமைக்காத சாலை தடுப்பால் விபத்து அபாயம்

2 ஆண்டுகளாகியும் சீரமைக்காத சாலை தடுப்பால் விபத்து அபாயம்

கீழம்பி: கீழம்பியில் சாலையோரம் பள்ளம் உள்ள பகுதியில், வாகனம் மோதியதில் சேதமாகி, சாய்ந்து கிடக்கும் சாலை தடுப்பை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பியில் இருந்து, கூத்திரமேடு செல்லும் சாலையோரம் பள்ளமான பகுதியில் விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளமாக உள்ள விவசாய நிலத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குவதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையோரம் இரும்பு தகடினால் செய்யப்பட்ட சாலை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன், இவ்வழியாக சென்ற கனரக வாகனம் மோதியதில், சாலை தடுப்பின் ஒரு பகுதி சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும்போது பள்ளமாக உள்ள விவசாய நிலத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, கீழம்பியில், சாய்ந்து கிடக்கும் சாலை தடுப்பை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ