மேலும் செய்திகள்
சாலை படுமோசம்
04-Nov-2024
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் வி.என்.பெருமாள் தெருவுடன், திருவள்ளுவர் தெரு இணையும் இடத்தில், சாலையோரம் மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் சென்ற மழைநீரால் மண் அரிப்பு காரணமாக சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், திருவள்ளுவர் தெருவில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், வி.என்.பெருமாள் தெருவிற்கு செல்ல திரும்பும்போதும், சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், வி.என்.பெருமாள் தெருவில், மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்கவும், மீண்டும் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
04-Nov-2024