உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மருந்து கடை ஷட்டர் உடைத்து ரூ.26,000 அபேஸ்

மருந்து கடை ஷட்டர் உடைத்து ரூ.26,000 அபேஸ்

சேலையூர், சேலையூர், கர்ணன் தெருவை சேர்ந்தவர் கனகராஜ், 44. கிழக்கு தாம்பரம், வால்மீகி தெருவில் மருந்து கடை நடத்தி வருகிறார்.கடந்த 16ம் தேதி இரவு, கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை, அருகே வசிக்கும் எடிசன் என்பவர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்திருப்பதை பார்த்து, கனகராஜ்க்கு தகவல் தெரிவித்தார்.அவர் வந்து பார்த்தபோது, ஷட்டரை உடைத்து மர்ம நபர், கல்லா பெட்டி யில் இருந்த, 26,000 ரூபாயை திருடி சென்றது தெரியவந்தது.கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில்,வெள்ளை நிற கோடு போட்ட பனியன் அணிந்த நபர், பணத்தை திருடி சென்றது பதி வாகியிருந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை