உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை

காஞ்சிபுரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரவுடியை மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ராஜா. பிரபவ ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்த இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g5mymw8z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இன்று மாநகராட்சி பகுதியான திருக்காலிமேடு பகுதியில் அவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்தது. தொடர்ந்து அவர் மீது வெடிகுண்டு வீசியதுடன், அரிவாள், கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய கொலை கும்பலை தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சிந்தனை
மார் 11, 2025 22:07

வெள்ளையன் எழுதிய சட்டம் ஒழுங்கு முறையின் பயன் இது தான்.. குற்றம் நடந்த பிறகு மக்கள் காசில் தேடும் பணி... நல்லா சாப்பிடுங்க...


raja
மார் 11, 2025 17:57

சூப்பர்... சட்டம் ஒழுங்கு... மாடல் ஆட்சி... நம்பர் ஒன்னு...!


Varadarajan Nagarajan
மார் 11, 2025 17:24

ரவுடியென்றும் பிரபல ரவுடியென்றும் பட்டங்களுடன் ஒருவன் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டுள்ளான் என்றால் காவல்துறையின் செயல்பாடு எப்படியென்று சொல்லத்தேவையில்லை. அரசியல்வியாதிகளின் பேராதரவு நிச்சயம் இருக்கும். காவல்துறை செய்யவேண்டிய வேலையே வேறு ஒரு கும்பல் செய்துள்ளது. இதை ஏன் தனிப்படை அமைத்து தேடி மீதமுள்ள நேரத்தையும் வீணடிக்கவேண்டும். ஜோலிமுடிஜது என கணக்கை முடிக்கவேண்டியதுதானே


கத்தரிக்காய் வியாபாரி
மார் 11, 2025 17:18

சட்டம் ஒழுங்கு என்னோட நேரடி கண்காணிப்புல சிரிக்குது


Kasimani Baskaran
மார் 11, 2025 16:24

ஹிந்தியை திணிப்பதாக கற்பனை செய்து கொண்டு அதை தடுப்பதிலேயே மாநில நிர்வாகம் செயல்படுகிறது. கிரிமினல்களை பொது வெளியில் விளையாட அனுமதித்து இருக்கிறார்கள்.


अप्पावी
மார் 11, 2025 15:28

பிரபல ரவுடியாய் வலம் வந்தாராம். போலீசுக்கு அப்பப்போ காசை விட்டெரிஞ்சே பிரபலமாயிருப்பாரு.


P.M.E.Raj
மார் 11, 2025 15:23

தினந்தோறும் கொலைகள் , அடடா இதுவல்லவோ திராவிட மாடல் . இதையெல்லாம் மறைக்கவே மும்மொழி கல்வி எதிர்ப்பு. மக்களும் இந்த கொலைகளை மறந்துவிடுவார்கள்.


சமீபத்திய செய்தி