உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மறைந்த டாக்டர் குடும்பத்தினருக்கு ரூ.18 லட்சம் நிதி

மறைந்த டாக்டர் குடும்பத்தினருக்கு ரூ.18 லட்சம் நிதி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் காலமான டாக்டர் முரளியின், குடும்பத்தினருக்கு, நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 18 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.இதற்கான வங்கி காசசோலையை, இத்திட்டத்திற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் ஜீவானந்தம், மறைந்த டாக்டர் முரளியின் மனைவி பார்வதி, மகன் பிரஹாஸ் முரளி ஆகியோரிடம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க மருத்துவ கல்வி செயலர் தேர்வு பேராசிரியர் டாக்டர் பாலமுருகன், உறுப்பினர்கள் டாக்டர் கர்ணன் சீனிவாஸ், டாக்டர் பிரசன்ன சீனிவாச ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை