உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சார்--பதிவாளர் அலுவலகம் அருகே காரிலிருந்த ரூ.6 லட்சம் கொள்ளை

சார்--பதிவாளர் அலுவலகம் அருகே காரிலிருந்த ரூ.6 லட்சம் கொள்ளை

படப்பை : ராயப்பேட்டையை சேர்ந்தவர் முசாமில் அகமது, 39. இவர், சிந்தாதிரிப்பேட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த செரப்பணஞ்சேரியில் உள்ளது. இந்த நிலத்தை, வேறொருவர் பெயரில் பத்திர பதிவு செய்ய, நேற்று படப்பை சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு, மாருதி ஸ்விப்ட் காரில் தன் தந்தையுடன் சென்றார். நிலத்திற்கான, ௬ லட்சம் ரூபாயை ஜெகத்குமார் என்பவரிடம் பெற்று, தன் காரில் வைத்தார். பின், சார்-பாதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு பணிகளை முடித்து, வீட்டிற்கு புறப்பட காருக்கு வந்தார். அப்போது, கார் கண்ணாடியை உடைத்து, மர்ம நபர்கள், காரில் வைத்திருந்த ௬ லட்சம் ரூபாயை திருடிச் சென்றது தெரிய வந்தது.மணிமங்கலம் போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்தும், காரில் பதிவான கை ரேகைகளை சேகரித்தும், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ