உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாம்சங் தொழிலாளர்கள் குடும்பத்தினர் போராட்டம்

சாம்சங் தொழிலாளர்கள் குடும்பத்தினர் போராட்டம்

ஸ்ரீபெரும்புதுார் : காஞ்சிபுரம் மாவட்டம்,சுங்குவார்சத்திரம் பகுதியில், இயங்கிவரும் சாம்சங்தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு நெருக்கடி அளிப்பதாக கூறி, தொழிற்சாலை நிர்வாக இயக்குநரை சந்திக்க அனுமதிக் கேட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மூவரை 'சஸ்பெண்ட்' செய்து நிர்வாகம் கடிதம் அளித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலையின் உள்ளே, 13வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில், தொழிலாளர் நல ஆணைய, தொழிற்சாலை நிர்வாகம், சி.ஐ.டி.யு., உடனான நடந்த மூன்று முத்தரப்பு பேச்சு தோல்வியில் முடிந்தது.இந்நிலையில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர், சி.ஐ.டி.யு., காஞ்சிபுரம் மாவட்டசெயலர் முத்துகுமார் தலைமையில் நேற்று காலைசுங்குவார்சத்திரம் சந்திப்பில் போராட்டத்தில்ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ