உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் தலா 100 கிலோ குப்பை சேகரிக்க நிபந்தனை

துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தம் தலா 100 கிலோ குப்பை சேகரிக்க நிபந்தனை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பையை மட்கும் குப்பை, மட்காத குப்பை என, இரு வகையாக தரம் பிரித்து, துப்புரவு பணியாளர்கள் சேகரிக்கின்றனர்.அவ்வாறு, வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பையை, ஒவ்வொரு துப்புரவு பணியாளர்களும், 100 கிலோ வரை சேகரிக்க வேண்டும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதற்கு, பணிக்கு செல்லாமல், துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில், ஓரிக்கையில் நேற்று காலை 6:00 மணிக்கு ஈடுபட்டனர்.ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் ஒவ்வொருவரும், தலா, 100 கிலோ வரை குப்பையை சேகரிக்க வேண்டும் எனவும், பேட்டரி வாகனத்தில் 200 கிலோ மட்கும் குப்பையை ஏற்ற வேண்டும் எனவும், சிறிய சரக்கு வாகனத்தில் 700 கிலோ குப்பையை ஏற்ற வேண்டும் போன்ற நிபந்தனைகளை, துப்புரவு பணியாளர்களுக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, துப்புரவு தொழிலாளர்களிடம், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். நிபந்தனை இன்றி பணியாற்ற அனுமதி அளித்ததால், துப்புரவு பணியாளர்கள், 9:30 மணிக்கு வேலைக்கு திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை