/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சமுதாய கழிப்பறை குறித்து புகார் அளிக்க க்யூ.ஆர்., குறியீடுடன் ஸ்கேனர் அமைப்பு
சமுதாய கழிப்பறை குறித்து புகார் அளிக்க க்யூ.ஆர்., குறியீடுடன் ஸ்கேனர் அமைப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில், ஏழு சமுதாய கழிப்பறைகள். இந்த சமுதாய கழிப்பறைகளை அப்பகுதிவாசிகள் இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர்.இந்த கழிப்பறைகள் குறித்து கருத்து மற்றும் குறைகள் பற்றி புகார் தெரிவிக்க, பேரூராட்சி சார்பில், க்யூ.ஆர்., குறியீடுடன் ஸ்கேனர் ஒட்டப்பட்டுள்ளது.அதில், கழிப்பறையை பயன்படுத்தும் பொதுமக்கள், க்யூ.ஆர்., குறியீடுடன் ஸ்கேன் செய்து, கழிப்பறை சுத்தமாக உள்ளதா, குழாயில் தண்ணீர் வருகிறதா, கழிப்பறைகளில் துர்நாற்றம் உள்ளதா, என்பவை குறித்து கருத்து தெரிவித்து, படத்துடன் புகாரை பதிவேற்றம் செய்யலாம்.இந்த புகார் குறித்து, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என, பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் தெரிவித்தார்.