உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில் ஆக.,4ல் சேவைகள் நிறுத்தம்

காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில் ஆக.,4ல் சேவைகள் நிறுத்தம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், ஆக.,4ம் தேதி அன்று பரிவர்த்தனை நடைபெறாது என, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் அறிக்கை: அஞ்சல் துறையில், புதிதாக மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம், அனைத்து தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. டிஜிட்டல் சேவை தடையற்ற மற்றும் பாதுகாப்பான முறையில் செயல்படுத்தப்படுத்துவதற்கு ஆக.,4ம் தேதி பரிவர்த்தனை இல்லாத நாளாக திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினத்தில் காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும், காஞ்சிபுரம், திருவள்ளூர் தபால் நிலையங்கள், 55 துணை தபால் நிலையங்கள், 272 கிராமப்புற கிளை தபால் நிலையங்கள் என, எந்த ஒரு தபால் நிலையங்களிலும் பரிவர்த்தனைகள் நடைபெறாது. எனவே, அஞ்சல் சேவை வாடிக்கையாளர்கள், தங்களின் சேவைகளை முன் கூட்டியே முடிக்க திட்டமிட்டுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை