வடிகால்வாய் இல்லாததால் சாலையில் வழியும் கழிவுநீர்
ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, காந்துார் ஊராட்சியில், வடிகால்வாய் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், காந்துார் ஊராட்சி, கோட்டைக்காரர் தெருவில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, மழைநீர் மற்றும் வீட்டுஉபயோக கழிவுநீர் வெளியேற, ஊராட்சி நிர்வாகத்தினர் வடிகால்வாய் அமைத்து தரவில்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர் சாலையில் வழிந்து வருகிறது. சாலையில் தேங்கும் கழிவுநீரால், கொசு அதிகளவில் பெருகுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குழந்தைகள், வயதானோர் வெளியில் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே, காந்துார் கோட்டைகாரர் தெருவில், வடிகால்வாய் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.