உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

 சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட லாலா குட்டை தெரு, மாகாளியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட தெருக்களில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இத்தெருக்களில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. மேலும், வீட்டு கழிப்பறையில் கழிவுநீர் வெளியேறாமல் உள்ளதால், இப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க கழிப்பறையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. சாலையில் நடந்து செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், 23வது வார்டில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் வழிந்தோடுவதால், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ