உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கழிவுநீர் வெளியேறி வடமங்கலத்தில் சீர்கேடு

கழிவுநீர் வெளியேறி வடமங்கலத்தில் சீர்கேடு

ஸ்ரீபெரும்புதுார்:குழாயில் அடைப்பு ஏற்பட்டு, பாதாள சாக்கடை மூடி வழியே கழிவுநீர் வெளியேறி வருவதால், வடமங்கலம் சாலையில் சுகாதார சீர்கேடு ஏற் பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதுார் நகராட்சியில், 15 வார்டுகளில், 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பாதாள சாக்கடை குழாய் வாயிலாக, வடமங்கலம் சாலையில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறது. இந் நிலையில், வடமங்கலம் சந்திப்பில் உள்ள பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடி வழியே வெளியேறும் கழிவுநீர், சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது; நோய் தொற்று பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி அதிகாரிகள், பாதாள சாக்கடை குழாய் அடைப்பை சரி செய்து, சாலையில் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ