உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

 கால்வாய் வசதி இல்லாததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்:சிறுணை பெருகல் கிராமத்தில், கால்வாய் வசதி இல்லாததால், சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுணை ஊராட்சியில், கீழ்சிறுணை, மேல்சிறுணை, சிறுணை பெருகல் ஆகிய துணை கிராமங்கள் உள்ளன. இதில், சிறுணை பெருகல் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், ஒரு சில தெருக்களில் கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சிறுணை பெருகல் கிராமத்தில் இருந்து, ஆரிய பெரும்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையில், பாதி துாரத்திற்கு வடிக்கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில், வீடுகளில் இருந்து உபயோகப்படுத்திய பிறகு வெளியேற்றப்படும் தண்ணீர், மழைநீர் கால்வாயில் வெளியேற்றி வந்தன. சிறுணை பெருகல்- - ஆரிய பெரும்பாக்கம் சாலையில் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. எனவே, சிறுணை பெருகல் கிராமத்தில், கால்வாய் வசதி ஏற்படுத்தி, கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ