சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் மீன்மார்க்கெட்டில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் பெருமாள் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் மட்டுமின்றி, மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.இதில், மீன் மார்க்கெட் அருகே, பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக, ‛மேன்ஹோல்' வழியாக கொப்பளித்தபடியே வெளியேறும் கழிவுநீர், சாலையில் ஓடைபோல சென்று காலி இடத்தில் தேங்கியுள்ளது.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் நடந்து செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.மேலும், சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் அருகிலேயே மீன்கள் வெட்டுவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே, பெருமாள் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.