உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நேருநகரில் கழிவுநீர் தேக்கம் தொற்று பரவும் அபாயம்

நேருநகரில் கழிவுநீர் தேக்கம் தொற்று பரவும் அபாயம்

வாலாஜாபாத் : வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து வாலாஜாபாத் பேரூராட்சி, முனிசிப் நாராயணசாமி தெரு வழியாக, வல்லப்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இக்கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகள், கடந்த ஆண்டுகளில் கால்வாய்பகுதிகளை துார்த்தும், கட்டடங்கள் கட்டியும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், நீர்வரத்து கால்வாய் நாளடைவில், வாலாஜாபாத் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயாக மாறியது. தற்போது, கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் காரணமாக, கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதன் ஒரு பகுதியாக வாலாஜாபாத், 11வது வார்டு, நேருநகரில், ஆர்.சி.எம்., உயர்நிலைப் பள்ளி அருகே தரைப்பாலத்திற்குள் அடைப்புகள் உள்ளதால், கழிவுநீர் தேங்கி உள்ளது. இதில், குப்பை கழிவுகள் குவிந்து துர்நாற்றம் மற்றும் கொசு உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம்உள்ளது.எனவே, வாலாஜாபாத், நேருநகர் தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை