உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திருமுடிவாக்கம் சிட்கோவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

திருமுடிவாக்கம் சிட்கோவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

குன்றத்துார்,:திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில், 241 ஏக்கர் பரப்பளவில், சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ளது. இங்கு, 466 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில், தமிழக அரசு சார்பில் 2.60 கோடி ரூபாய் மதிப்பில், 2 லட்சம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிக்கும் வகையில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம், திறந்து வைத்தார். இந்த சுத்திகரிப்பு நிலையத்தை, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் உள்ள, 466 நிறுவனங்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள மற்ற தொழில் நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை