உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க வளாக சுற்றுச்சுவரையொட்டி, அம்பேத்கர் நகர் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீர், சுற்றுச்சுவரில் ஏற்பட்டுள்ள ஓட்டை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்க சாலையில் துர்நாற்றத்துடன் வழிந்தோடுகிறது.தொடர்ந்து துர்நாற்றத்துடன் வெளியேறும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, விளையாட்டு அரங்க சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, அம்பேத்கர் நகரில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி