மேலும் செய்திகள்
நடுரோட்டில் பள்ளம்
19-Oct-2024
ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, ஒரகடத்தில் ‛காஸ் பைப் லைன்‛ பதிக்க சாலை நடுவே தோண்டபட்ட பள்ளத்தை சரியாக மூடாததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒரகடம் சுற்றுவட்டார பகுதிகளில் காஸ் குழாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இதற்காக, சாலையோரங்களில் பைப் லைன் போடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், ஒரகடம் அடுத்த, பண்ருட்டி கண்டிகை அருகே, சாலை நடுவே பள்ளம் தோண்டி, காஸ் பைப் லைன் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.பணிகள் நிறைவடைந்த நிலையில், காஸ் குழாய் புதைக்க தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படவில்லை. இதனால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த நெடுஞ்சாலையில், அதிவேகமாக வரும் வாகனங்கள், பள்ளத்தில் விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, ‛காஸ்' குழாய் அமைக்க தோண்டப்பட் பள்ளத்தில் மண்ணை கொட்டி, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19-Oct-2024