உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கைத்தறி துணி நெசவு செய்ய தொழிலாளர்கள் பற்றாக்குறை

கைத்தறி துணி நெசவு செய்ய தொழிலாளர்கள் பற்றாக்குறை

காஞ்சிபுரம்: கைத்தறி துணிகள் நெய்வதற்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது என, நெசவாளர்கள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம், அய்யன்பேட்டை, நாயக்கன்பேட்டை உள்ளிட்ட பகுதியில், கைத்தறி நெசவாளர்கள் மற்றும் பட்டுசேலை நெய்யும் நெசவாளர்கள் உள்ளனர். இந்நிலையில், தமிழக பா.ஜ., நெசவாளர் பிரிவு மாநில செயலர் சாந்தி, அய்யன்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்களை சந்தித்து, நேற்று கலந்துரையாடினார். நெசவாளர்களின் குறைகள் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து கேட்டறிந்தார். கைத்தறி துணிகளுக்கு அதிகமாக வரவேற்பு உள்ளது. இருப்பினும், இதுபோன்ற துணிகளை நெசவு செய்வதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது என, நெசவாளர்கள் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, தமிழக நெசவாளர் பிரிவு மாநில துணை தலைவர் வஜ்ஜிரவேலு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை