உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செங்கல்பட்டுக்கு சிற்றுந்து சேவை துவக்கம்

செங்கல்பட்டுக்கு சிற்றுந்து சேவை துவக்கம்

சாத்தணஞ்சேரி:சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி வரை செல்ல தனியார் சிற்றுந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாத்தணஞ்சேரி, சீட்டணஞ்சேரி, குருமஞ்சேரி, களியப்பேட்டை, ஒரக்காட்டுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தின் கடைக்கோடியில் உள்ளன.இந்த கிராமங்களைச் சேர்ந்தோருக்கு செங்கல்பட்டு முக்கிய நகர் பகுதியாக உள்ளது. மேலும், இந்த கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதியில் இயங்கும் தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரும் செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற பகுதிகளில் உள்ள கல்வி கூடங்களுக்கு சென்று வருகின்றனர். வியாபாரிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தங்களது பணி சார்ந்து தினமும் செங்கல்பட்டு செல்கின்றனர்.எனினும், சாத்தணஞ்சேரி சுற்றுவட்டாரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்ல போதுமான பேருந்து வசதி இல்லாத நிலை உள்ளது.இதனால், செங்கல்பட்டு செல்ல கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த சாத்தணஞ்சேரி உள்ளிட்ட கிராம வாசிகள் வலியுறுத்தி வந்தனர்.அதன்படி, அரசு அனுமதி பெற்று சாத்தணஞ்சேரி துவங்கி சீட்டணஞ்சேரி, ஒரக்காட்டுப்பேட்டை வழியாக செங்கல்பட்டு மற்றும் கூடுவாஞ்சேரி வரை தனியார் சிற்றுந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை