உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சித்தா கல்லுாரி மாணவி விடுதியில் தற்கொலை

சித்தா கல்லுாரி மாணவி விடுதியில் தற்கொலை

ஸ்ரீபெரும்புதுார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷீலாராணி, 19. ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, தர்மா ஆயூர்வேதா மருத்துவ கல்லுாரியில் முதலாம் ஆண்டு சித்தா மருத்துவம் படிந்து வந்தார்.சக கல்லுாரி மாணவியர் இருவருடன், கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, ஷீலாராணி வாந்தி எடுத்தார். சக மாணவியர், அவரை மீட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே இறந்தது தெரிந்தது. ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில் அவர், ஆன்லைனில், 'பொட்டாசியம் சைனைடு' வாங்கி, தண்ணீரில் கலந்து குடித்தது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.ஷீலாராணி, எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என, சக மாணவியர், கல்லுாரி நிர்வாகம் மற்றும் பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை