உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் இருக்கையின்றி தரையில் அமரும் அவலம்

உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் இருக்கையின்றி தரையில் அமரும் அவலம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, வந்தவாசி செல்லும் சாலையில், உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது. இந்த தாலுகா அலுவலக கட்டுப்பாட்டின்கீழ், சாலவாக்கம், திருப்புலிவனம், அரும்புலியூர், குன்னவாக்கம், கலியம்பூண்டி ஆகிய குறுவட்டங்களில் 121 வருவாய் கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெறவும், பட்டா பெறவும், பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கவும் தினசரி வந்து செல்கின்றனர்.இங்கு வருபவர்கள் அமர இருக்கைகள் இல்லை. இதனால் மக்கள் தரையில் அமர வேண்டிய நிலை உள்ளது.மேலும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், முதல் தளத்திற்கு செல்ல சாய்தள பாதை வசதி இல்லை. இதனால் அவர்கள் சிரமப்பட்டு படி ஏறிச் செல்கின்றனர்.எனவே, உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், மக்கள் அமர இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை