மேலும் செய்திகள்
12 ஊராட்சிகளில் நாளை கிராம சபை
23-Jan-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வாரந்தோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்து, வரவு - செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்து, மாநில ஊரக வளர்ச்சி தணிக்கை சங்கத்திற்கு, அறிக்கை சமர்ப்பிப்பது வழக்கமாக உள்ளது.தற்போது, 22வது சுற்றுக்கு கூத்திரம்பாக்கம், ஆட்டுபுத்துார், ஆலப்பாக்கம், வளத்துார், தினையாளம், கப்பான்கோட்டூர், பூந்தண்டலம் ஆகிய ஊராட்சிகளில், நாளை சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
23-Jan-2025