உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்புகள் மானியத்தில் பெறலாம்: கலெக்டர்

சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்புகள் மானியத்தில் பெறலாம்: கலெக்டர்

காஞ்சிபுரம்:சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்புகளை 70 சதவீத மானியத்தில் விவசாயிகள் பெற விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:வேளாண்மையில் நீர்ப் பாசனத்திற்கு தேவையான எரி சக்தியை உறுதி செய்யும் நோக்கத்துடன் 2013- - 14ம் ஆண்டு முதல் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்புகளை தமிழக அரசு விவசாயிகளுக்கு மானியத்தில் அமைத்துக் கொடுத்து வருகிறது.சூரிய சக்தி பம்புகள் வாயிலாக மின் இணைப்பு தேவையின்றி பகலில் அதிகபட்சம் எட்டு மணி நேரம் பாசனத்திற்கு தடையில்லா மின்சாரம் பெற முடியும்.மத்திய அரசு, பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் 2025 - -26 நிதி ஆண்டில் தமிழகத்திற்கு, 1,000 சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை வேளாண்மை பொறியியல் துறையின் வாயிலாக செயல்படுத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது.இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 9 ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.இத்திட்டத்தின் வாயிலாக சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு 70 மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 60 மானியத்திலும் அமைத்துத் தரப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் நேரடியாக https://pmkusum.tn.gov.inஎன்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் அல்லது விவசாயிகள் நேரடியாக அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவிப் பொறியாளரை நாடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !