மேலும் செய்திகள்
24ல் திருநங்கையருக்கு சிறப்பு நலத்திட்ட முகாம்
11-Jun-2025
காஞ்சிபுரம்:அரசின் நலத்திட்டங்களில் விண்ணப்பிக்கவும், பதிவு செய்யவும், திருநங்கையருக்கான சிறப்பு முகாம், வரும் 24ல், காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் நடக்க உள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு :சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கையருக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க ஏதுவாகவும், பிற நலத்திட்ட உதவிகள் வழங்கும் தொடர்பு துறைகளும் ஒருங்கிணைந்து திருநங்கையருக்கு முகாம் நடத்தப்படுகிறதுஅடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சிக்கு பதிவு செய்தல் உள்ளிட்டவை இம்முகாமில் விண்ணப்பிக்கவும், பதிவு செய்யவும் திருநங்கையருக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், வரும் 24ம் தேதி நடைபெறும் திருநங்கையருக்கான சிறப்பு முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கை, திருநம்பிகளும் தவறாமல் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11-Jun-2025