தீர்வை பாக்கி ஆவணங்களை திரும்ப பெற சிறப்பு முகாம்
உத்திரமேரூர்,உத்திரமேரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 73 கிராமங்களில் உள்ள பொதுமக்கள், வீடு, நிலம், மனை வாங்க, விற்கமற்றும் திருமண பதிவும் செய்து வருகின்றனர்.இந்நிலையில்,உத்திரமேரூர் சார் - பதிவாளர் அலுவலகத்திற்குஉட்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆவணதாரர்கள், கடந்த ஆண்டுக்கானமுத்திரை தீர்வை மற்றும்வட்டித் தொகையை செலுத்தாமல் உள்ளனர்.இதற்காக, வரும் பிப்., 14ல், தீர்வை பாக்கிஆவணங்களை திரும்ப பெறுவதற்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.இது குறித்து, உத்திர மேரூர் சார் - பதிவாளர் நவீன் கூறியதாவது:உத்திரமேரூர் சார் -பதிவாளர் அலுவலகத்தில், பிப்., 14ல் தீர்வை பாக்கி ஆவணங்களை திரும்பப் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.இதில், உத்திரமேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்தஆவணதாரர்கள், ஆயத் தீர்வை மற்றும் வட்டித் தொகையை செலுத்தி, தங்களது ஆவணங்களை பெற்று செல்லலாம்.இவ்வாறு அவர்கூறினார்.