புத்தரின் எலும்பு துகள்களுக்கு காஞ்சி விஹாரில் சிறப்பு பூஜை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வையாவூர் சாலை, கோனேரிகுப்பம் ஊராட்சி, காமாட்சியம்மன் நகரில், போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவில் உள்ளது. இங்கு புத்தர் சிலை, போதி தர்மர் உள்ளிட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன புத்த துறவியர் தங்குவதற்கு பிக்கு நிவாஸும் உள்ளது. புத்த விஹாரில் தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த புத்த துறவியர் வேன் வால்போலாவேதா, வேன் ரத்தினாராசி ஆகிய இருவரும், காஞ்சிபுரத்தில் உள்ள புத்த விஹாருக்கு, பகவான் புத்தருடைய எலும்பு துகள்களை எடுத்து வந்தனர்.இலங்கை துறவியர் இருவருக்கும், காஞ்சிபுரம் புத்தவிஹார் நிர்வாகம் சார்பில் திருநாவுக்கரசு வரவேற்றார். தொடர்ந்து, விஹாரில் வைக்கப்பட்ட புத்தரின் எலும்பு துகள்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.