உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்பீடு போஸ்ட் சேவை நுகர்வோர் சங்கம் மனு

ஸ்பீடு போஸ்ட் சேவை நுகர்வோர் சங்கம் மனு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில் நிறுத்தப்பட்ட, மாலை நேர ‛ஸ்பீடு போஸ்ட்' சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, தமிழ்நாடு அஞ்சல் துறை தலைவருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்:அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், பொதுமக்கள் அஞ்சல் துறையின் பதிவு தபால் சேவையை நாடி வருகின்றனர். குறிப்பாக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழக்கறிஞர் அறிவிப்பு, நீதிமன்ற சம்மன் மற்றும் நோட்டீஸ் உள்ளிட்டவற்றுக்கு, அஞ்சல் துறையின் பதிவு தபால் சேவை உறுதுணையாக இருந்து வருகிறது.காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில், மாலை 6:00- - 8:00 மணி வரை ஸ்பீடு போஸ்ட் சேவை இயங்கி வந்தது. இதனால், அனைத்து தரப்பினரும் இந்த சேவையை பயன்படுத்தி வந்தனர். கடந்த 2019ல் கொரோனா ஊரடங்கின்போது, மாலை நேர இச்சேவை நிறுத்தப்பட்டது.அதன்பின், தற்போது வரை இச்சேவையை செயல்படுத்த அஞ்சல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மாலை நேரத்தில் தபால், விண்ணப்பம், தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றை அனுப்ப முடியாத சூழல் உள்ளதால், அஞ்சல் துறைக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.எனவே, காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில், கடந்த 2019ல் நிறுத்தப்பட்ட மாலை நேர ‛ஸ்பீடு போஸ்ட்' சேவையை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ