காஞ்சியில் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திறப்பு
ஸ்ரீகுமரன் தங்க மாளிகை, 51வது கிளை, காஞ்சிபுரத்தில் நேற்று கோலாகலமாக திறக்கப்பட்டது. ஸ்ரீகுமரன் தங்க மாளிகை மேலாண்மை இயக்குநர் டி.கே.சந்திரன், ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். உடன், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை இயக்குநர்கள் கே.விநாயகம், மீனாட்சி விநாயகம், நந்தகோபால், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் விக்ரம் நாராயண் மற்றும் அகஷ்யா விக்ரம் ஆகியோர் பங்கேற்றனர். முதல் விற்பனையை, ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிர்வாக இயக்குநர் கே.மாணிக்கம் துவக்கி வைக்க, அக்னி ஸ்டீல் உரிமையாளர் குணசுந்தரி தங்கவேல் மற்றும் ஐஸ்வர்யா இளங்கோவன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.