உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 978 கோரிக்கை மனுக்கள் ஏற்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 978 கோரிக்கை மனுக்கள் ஏற்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத், மேல்பொடவூர் ஆகிய இடங்களில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், 978 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. வாலாஜாபாத் பேரூராட்சியில், நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமிற்கு, வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், பொது கோரிக்கை மனுக்களை பெற்று முகாமினை துவக்கி வைத்தார். இதி ல், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 4, 5, 6, 7 மற்றும் 11, 12, 14, 15 ஆகிய எட்டு வார்டுகளைச் சேர்ந்த பொது மக்கள் பங்கேற்று மகளிர் உரிமைத்தொகை, ஜாதி சான்று, மனைபட்டா, அரசு தொகுப்பு வீடு, விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை, மரு த்துவ காப்பீடு அட்டை உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த 45 சேவைகளுக்கான 448 கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அதில், 16 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆவணங்கள் பயனாளிகளிடத்தில் வழங்கப்பட்டன. மேல்பொடவூர்: மேல்பொடவூரில் நேற்று நடந்த, உங்களுடன் ஸ்டாலின்' முகாமிற்கு, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கோமளா தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க.,. - எம்.எல்.ஏ.,-எழிலரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மேல் பொடவூர், சிறுவள்ளூர், சிறுவாக்கம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்தவர்களிடம், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, 530 மனுக்கள் பெறப்பட்டன. இதி ல், ஏழு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !